சபரிமலை நடை இன்று அடைப்பு ஆக.9ல் நிறை புத்தரிசி பூஜை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

 சபரிமலை நடை இன்று அடைப்பு ஆக.9ல் நிறை புத்தரிசி பூஜை

Added : ஜூலை 19, 2020
Share

சபரிமலை : சபரிமலையில் ஜூலை 16 முதல் ஆடி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பூஜைகள் இன்று (ஜூலை 20) நிறைவுபெற்று இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

நிறை புத்தரிசி பூஜை ஆக.,9ல் நடக்கிறது.இதற்காக ஆக., எட்டாம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். ஆக., ஒன்பதாம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிேஷகம் நடக்கும். காலை 5:50 மணி முதல் 6:20க்குள் முகூர்த்தத்தில் நிறைபுத்திரிசி பூஜை நடைபெறும். தேவசம்போர்டுக்கு சொந்தமான வயல்களில் அறுவடையான நெற்கதிர்கள் பூஜிக்கப்பட்டு கோயில் சுற்றுப்புறங்களில் கட்டப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். அன்று இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக., 16ல் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X