பொது செய்தி

தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு; தடையை மீறி சுற்றிய வாகனங்கள் பறிமுதல்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கடலுார்; முழு ஊரடங்கு காரணமாக கடலுார் மாவட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஜூலை மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வின்றி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.அதன்படி இம்மாதத்தில் 3வது ஞாயிற்று கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்கிடையே கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் தாசில்தார் கவியரசு கொரோனாவுக்கு பலியானதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் மருந்துக்கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. காலையில் பால் வினியோகம் தடையின்றி நடந்தது. உணவு விடுதிகள், தனியார் அலுவலகங்கள் போன்றவை திறக்கப்படவில்லை. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை.போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலையில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வாகனங்களில் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.காரணமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, அபராதம் விதித்தனர். பல இடங்களில் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.தொலை துாரத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின. சாலையில் போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பஸ் மட்டுமே இயக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X