பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளில் டி.ஆர்.ஓ., கள ஆய்வு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 குடியிருப்பு பகுதிகளில் டி.ஆர்.ஓ., கள ஆய்வு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கொண்டம்பட்டி ஊராட்சியில், கொரோனா தொற்று பாதித்து இறந்த துாய்மை பணியாளரின், குடியிருப்பு பகுதியில் டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.கொண்டம்பட்டி ஊராட்சியில், 53 வயதுள்ள துாய்மை பணியாளர் உடல் நலக் குறைவு காரணமாக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு வருவதற்குள் இறந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதனை தொடர்ந்து, அவர் வசித்த வீடு, குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் ஸ்ரீதேவி, டாக்டர் சமீதா மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.இறந்த துாய்மை பணியாளர் வீட்டில் உள்ள ஏழு பேரையும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.இலவசமாக அரிசி, பருப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினரை, டி.ஆர்.ஓ., அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X