சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

முக கவசத்தில் தாமரை!

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 முக கவசத்தில் தாமரை!

'இவர் மட்டும், எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறார் என தெரியவில்லையே' என, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டாவை பற்றி ஆச்சரியப்படுகின்றனர், அந்த கட்சி பிரமுகர்கள். இது, கொரோனா காலம். நாடு முழுதும் புயல் வேகத்தில் வைரஸ் பரவுவதால், மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சமூக இடைவெளி, முக கவசம் அணிவது போன்றவை கட்டாயமாகி விட்டன. இந்த விஷயத்தில் தான், பா.ஜ.,வினர், சற்று மாற்றி யோசித்துள்ளனர்.

அடுத்த சில மாதங்களில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதற்கான பிரசாரத்தை, பா.ஜ.,வினர், முக கவசத்திலிருந்தே துவக்கி விட்டனர். சமீப காலமாக, பா.ஜ., வினர் பயன்படுத்தும் முக கவசங்கள், கட்சிக் கொடியின் நிறமான காவி நிறத்தில் இருப்பதுடன், அதில், தாமரைச் சின்னமும் வரையப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியில் சென்றாலே, பா.ஜ., நிர்வாகிகளில் இருந்து, தொண்டர்கள் வரை, இந்த முக கவசத்தைத் தான் அணிந்து செல்கின்றனர். '
'ஜே.பி.நட்டாவின் ஐடியா இது. அவர் உத்தரவின்படி தான், தாமரை வரையப்பட்ட முக கவசங்களை கட்சியினர் பயன்படுத்துகின்றனர்' என்கின்றனர். நட்டாவோ, 'இது, என் ஐடியா இல்லை. கட்சியினர், தாங்களாகவே ஒரு ஆர்வத்துடன் இந்த தாமரை முக கவசங்களை பயன்படுத்துகின்றனர்' என, சிரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X