தமிழ்நாடு

ஏற்பாடு; 108 ஆம்புலன்சில் 'மல்டி பாரா மானிட்டர்' பொருத்த...உயிரிழப்பை தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 ஏற்பாடு;  108 ஆம்புலன்சில் 'மல்டி பாரா மானிட்டர்' பொருத்த...உயிரிழப்பை தடுக்க சுகாதாரத் துறை நடவடிக்கை

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகளில், உயிரிழப்பை தடுக்கும் வகையில் 'மல்டி பாரா மானிட்டர்' பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு அவசர மருத்துவ உதவிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை துவங்கப்பட்டது. இதன் மூலம் விபத்தில் காயமடைவோர், பிரசவம் உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிகள் பெற பொது மக்களுக்கு ஏதுவாக உள்ளது.கடலுார் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் 35 உள்ளது. இதில், அதிநவீன சிகிச்சை ஆம்புலன்ஸ் 2, பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் 2, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமாக செல்லும் வகையில் பயன்படுத்தப்படும் 1 பைக் ஆம்புலன்ஸ், கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் 6 ஆகியன அடங்கும். ஆம்புலன்சில் வழக்கமான மருத்துவ உபகரணங்களுடன், ஆக்சிஜன் சப்ளை யூனிட், ரத்த அழுத்த கருவி, நாடித் துடிப்பு கருவி உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி உயிரிழப்பை தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பை ஒரே நேரத்தில் துல்லியமாக கண்டறிய 'மல்டி பாரா மானிட்டர்' பொருத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்டம் வாரியாக 'மல்டி பாரா மானிட்டர்' அனுப்பப்பட்டு வருகிறது.கடலுார் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5 வாகனங்களில் பொருத்த மல்டி பாரா மானிட்டர்' வந்துள்ளது. விரைவில் பொருத்தப்பட உள்ளது.இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு ஆக்ஸிமீட்டர் என்ற கருவியில் நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவையும், ரத்த அழுத்தத்தை மற்றொரு தனி கருவியிலும் கண்டறியப்படுகிறது.

இருப்பினும் 'மல்டி பாரா மானிட்டர்' பொருத்துவதன் மூலமாக ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அளவை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும்.இதனால் உரிய சிகிச்சை அளித்து உயிரிழப்பை தடுக்க முடியும். மாவட்டத்தில் நீண்ட துாரம் செல்லும் ஆம்புலன்சில் மானிட்டரை விரைவில் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக மானிட்டர் வந்ததும் மீதமுள்ள ஆம்புலன்சுகளுக்கும் பொருத்தப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X