பொது செய்தி

தமிழ்நாடு

விருதை தாசில்தார் பலி எதிரொலி முழு ஊரடங்கு; மக்கள் வேண்டுகோள்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; கொரோனா பாதிப்புக்கு தாசில்தார் பலியானதால், விருத்தாசலம் பகுதியில் முழு ஊரடங்கை கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் கடந்த ஒருமாதத்திற்குள், கொரோனா பாதிப்பால், 10 பேர் பலியான சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், கடை வீதியை சேர்ந்த 58 வயது கவரிங் கடை வியாபாரி, ஜங்ஷன் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடையில் பணிபுரிந்த ஊழியர்கள், தில்லை நகரைச் சேர்ந்த 63 வயது முதியவர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 60 வயது முதியவர், அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பலியாகினர்கள்.கடந்த வாரம், வி.சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், வீராரெட்டிக்குப்பம் 60 வயது ஆட்டோ டிரைவர், பேரளையூர் 45 வயதுடைய ஒருவரும் கொரோனாவுக்கு பலியானார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விருத்தாசலம் காந்தி நகரைச் சேர்ந்த 50 வயது முதியவர், கோ.பூவனுார் 60 வயது முதியவர் என இருவர் ஒரேநாளில் இறந்தனர். கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த தாசில்தார் ஒருவரும் நேற்று முன்தினம் இறந்ததால், விருத்தாசலம் பகுதியில் மட்டும் பலி எண்ணிகை 10 ஆக உயர்ந்துள்ளது.இப்பகுதியில் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால், அச்சமடைந்த பொதுமக்கள் பலர், விருத்தாசலம் பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X