பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணியாமல் மக்கள் அலட்சியம்; மந்தாரக்குப்பத்தில் தொற்று பரவும் அபாயம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதியில், பொது மக்கள், வியாபாரிகள் முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் காரணமாக கடைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கின்றன.கடலுார் மாவட்டத்தில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1,700க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கடை வீதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பொது மக்கள், வியாபாரிகள் எவ்வித அச்சமும் இன்றி, முக கவசம் அணியாமல் வெளியே அலட்சியமாக செல்கின்றனர்.முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது; கடைக்கு வருவோர் சமூக இடைவெளியை கடை பிடிக்க, கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும், அவர்கள் வியாபாரம் நடந்தால் போதுமென எதனையும் கண்டுகொள்வதில்லை.இதனால், மந்தாரக்குப்பம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முக கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீது அதிகாரிகள், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X