பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி பாரதி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 10 பேர் சதம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புவனகிரி; புவனகிரி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 15 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்து வருகிறது.புவனகிரி பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 75 பேரும் தேர்ச்சிப்பெற்று 100 சதவீத தேர்ச்சியை தக்க வைத்துள்ளனர்.மாணவர் அபிேஷக் 570, மாணவி லோகேஷ்வரி 533, மற்றும் அபிலாஷ்னி 527 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் எட்டு மாணவர்களும், மற்ற மாணவர்கள் சிறப்பிடத்திலும் தேர்ச்சிப் பெற்றுள்ளதுடன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 10 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி நிர்வாகி டாக்டர் அன்பழகன், முதல்வர் பழனியம்மாள், பள்ளி ஆலோசனைக் குழுவினர் ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்தினர். தொடர்ந்து நுாறு சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்து வரும் பள்ளி நிர்வாகத்தை பெற்றோர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X