பத்திரப்பதிவு பணி பாதிப்பு: மக்கள் காத்திருப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 பத்திரப்பதிவு பணி பாதிப்பு: மக்கள் காத்திருப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில், நேற்று முன்தினம் இணைய இணைப்பு கிடைக்காததால், மக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம், அரசு உத்தரவுப்படி. கடந்த சில வாரங்களாக சனிக்கிழமைகளிலும் இயங்குகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் வேலை நாள் என்பதால், பொதுமக்கள் பத்திரப்பதிவுகளுக்காக காலை முதலே அலுவலகத்தில் குவிந்தனர். வழக்கம் போல பத்திரப்பதிவு செய்ய, துறையின் அலுவலக இணையதளத்தை இயக்க அலுவலக ஊழியர்கள் முயன்ற போது, இணையதள இணைப்பு சீராகவில்லை.அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகள் பழுதடைந்ததால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இணைய சேவை வழங்கும் பி.எஸ்.என்.எல், மற்றும் தனியார் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.மதிய உணவு இடைவேளை வரை, பிரச்னை சரி செய்யப்படாததால், பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் பலரும், காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். மாலை, 3:00 மணிக்கு, இணைய இணைப்பு சீரானது.சார் பதிவாளர் இளங்கோவன் கூறுகையில், ''சமீப காலமாக 'சர்வர்' மற்றும் இணையதள பிரச்னைகள் இல்லாமல், பத்திரப்பதிவு சுமூகமாக நடந்து வந்தது.திடீரென ஏற்பட்ட பிரச்னையால், பத்திரப்பதிவு பாதித்தது. மறுபடியும் பிரச்னை ஏற்படாமல் இருக்க, இணைய சேவை நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி, வலியுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X