எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

அனைவருக்கும் விரைந்து நீதி கிடைக்குமா?

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
நீதி, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட்,  நீதிபதிகள், கீழமை நீதிமன்றம்

'தாமதமாகும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமம்' என்பர். இந்தியாவில், மாவட்டம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 3.30 கோடி வழக்குகள் தேங்கி யுள்ளன. இவற்றில், ஓராண்டுக்கு மேற்பட்ட வழக்குகள், 1.86 கோடிக்கும் அதிகமாக உள்ளன.

தமிழகத்தில், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில், 17.57 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன.

தேசிய நீதித் துறை தகவல் மையத்தின் கணக்குப்படி, மாவட்ட நீதிமன்றங்களில், 11 லட்சத்து, 85 ஆயிரத்து, 258 வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து லட்சத்து, 72 ஆயிரத்து, 540 வழக்குகளும் முடங்கியுள்ளன.இந்த வழக்குகளை விரைந்து தீர்க்க, நிர்வாக மேலாண்மை, சாட்சிகள் நிர்வாகம், விசாரணை நிர்வாகம், ஆவண நிர்வாகம் ஆகியவற்றுடன், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.


மேம்படுத்த வேண்டும்



உச்ச நீதிமன்றம், ஓராண்டில், 222 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறது. அதிக விடுமுறையும், வழக்குகள் தேக்கத்திற்கு காரணம். அதே சமயம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு, ஓராண்டில், 10 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

தற்போது, நாடு முழுதும், கீழமை நீதிமன்றங்களில், 17 ஆயிரத்து, 785 நீதிபதிகள் உள்ளனர். 5,450 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக, ராஜ்ய சபாவில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், அனுமதிக்கப்பட்ட, நீதிபதி பணியிடங்களில், 1,427 இடங்கள் காலியாக உள்ளன. இது, பீஹாரில், 643 ஆக உள்ளது.அதிக நீதிபதிகளை நியமிப்பதால் மட்டுமே, வழக்குகளின் தேக்கம் குறையும் என, கூற முடியாது. கீழமை நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என, 245வது, சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த, 2018--19ம் ஆண்டின், பொருளாதார ஆய்வறிக்கையில், 'கூடுதலாக, 2,279 நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், கீழமை நீதிமன்றங்களில் ஓராண்டிற்கு வரும் புதிய வழக்குகள் அனைத்தையும் தீர்க்க முடியும். 'அத்துடன், மேலும், 8,152 நீதிபதிகளை நியமித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து வழக்குகளையும் முடிக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்காலிக நீதிபதிகள்



வழக்குகளை விரைந்து முடிக்கவே, லோக் அதாலத் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. லோக் அதாலத் விசாரித்து வழங்கும் தீர்ப்பு, சிவில் நீதிமன்ற தீர்ப்புக்கு இணையாக கருதப்படும். அத்துடன், அதுவே இறுதி தீர்ப்பாகவும், மேல்முறையீடு செய்ய முடியாததாகவும் இருக்கும் வகையில், சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இது தவிர, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வகையில், மாற்று திட்டங்களையும், இந்தியா ஆராய வேண்டும்.

'''ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை, உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமித்தால், வழக்குகள் தேக்கத்தை குறைக்கலாம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் யோசனை தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனத்தின், 224ம் சட்டப் பிரிவு, தற்காலிக நீதிபதிகள் நியமனத்திற்கு வகை செய்கிறது. அதனால், உயர் நீதிமன்றங்களில், கூடுதல் நீதிபதிகளை நியமித்து, வழக்குகள் தேங்குவதை குறைக்கலாம்.

நமது சிறப்பு நிருபர்

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - tirumalai,இந்தியா
20-ஜூலை-202019:56:16 IST Report Abuse
SENTHIL நல்ல நீதிபதிகள் இனிமேல் கிடைக்க மாட்டார்கள்...
Rate this:
Cancel
20-ஜூலை-202016:48:17 IST Report Abuse
ஆப்பு எல்லோருக்கும் நீதியும், 15 லட்சமும் சீக்கிரம் கிடைச்சுரும். அதுக்குத்தானே நீதிமன்றமும், மத்திய அரசும் உள்ளன. நம்பிக்கைதானே வாழ்க்கை.
Rate this:
Cancel
20-ஜூலை-202015:32:26 IST Report Abuse
theruvasagan கடற்கரையில சமாதி கட்ட தயிர்வடை படையல் போட நட்ட நடு ராத்திரியானாலும் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X