இதே நாளில் அன்று

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூலை, 20, 1920 இப்போதைய மேற்கு வங்க மாநிலம், அப்போதைய வங்காளத்தின், ஜெயராம்பாடி கிராமத்தில், 1853 டிச., 22ல் பிறந்தவர், சாரதா தேவி. இவரது தந்தை, கோவில் பூசாரி. ஆன்மிக உரைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். தன், 5வது வயதில், ராமகிருஷ்ணருக்கு பால்ய விவாகம் செய்து வைத்தனர். 'மனநலன் பாதிக்கப்பட்டவர்' என, தன் கணவரை, ஊரார் துாற்றியபோதும், அவரை குருவாக ஏற்று, தானும் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். ராமகிருஷ்ணரின் சீடர்களுக்கும் பணிவிடை செய்தார்.

கணவரின் மறைவுக்கு பின், ராமகிருஷ்ண மடத்தை, 1898-ல் துவக்கினார். 'சங்க ஜனனி' என்று இவரைப் போற்றினார், சுவாமி விவேகானந்தர். சகோதரி நிவேதிதையின் மறைவுக்குப் பின், அவர் ஆரம்பித்த பெண்கள் பள்ளியை, தொடர்ந்து நடத்த காரணமாக இருந்தார்.கடந்த, 1920 ஜூலை, 20ல், இறைவனடி எய்தினார். அன்னை சாரதா தேவி காலமான தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X