ஒரே நாளில் 38,902 பேர் பாதிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், கொரோனா வைரசால், இதுவரை, 10.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை, 26 ஆயிரத்து, 816 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகத்தின், நேற்றைய அறிக்கை:நாட்டில், இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், 38 ஆயிரத்து, 902 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 10 லட்சத்து, 77 ஆயிரத்து, 618 ஆக அதிகரித்துள்ளது.இதில், மஹாராஷ்டிராவில் மட்டும், தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்தை கடந்துள்ளது. தமிழகம், 1.66 லட்சம் பேருடன், இரண்டாம் இடத்திலும், டில்லி, 1.22 லட்சம் அதற்கடுத்த இடத்திலும் உள்ளன.

கர்நாடகாவில், 59 ஆயிரத்து, 652 பேரும், குஜராத்தில், 47 ஆயிரத்து, 390; உ.பி.,யில், 47 ஆயிரத்து, 36 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.ஆந்திராவில், 44 ஆயிரத்து, 609; தெலுங்கானாவில், 43 ஆயிரத்து, 780; மேற்கு வங்கத்தில், 40 ஆயிரத்து, 209 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக, நேற்று, 23 ஆயிரத்து, 672 பேர், நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.இவர்களுடன், வைரஸ் தாக்குதலில் இருந்து, இதுவரை மொத்தம், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 422 பேர் மீண்டுள்ளனர்; மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 379 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நாட்டில், நேற்று மட்டும், மஹாராஷ்டிராவில், 144 பேர், கர்நாடகாவில், 93; தமிழகத்தில், 88; ஆந்திராவில், 52; மே., வங்கத்தில், 27; டில்லியில், 26; உ.பி.,யில், 24 பேர் உள்ளிட்ட, 543 பேர் பலியாயினர்.

இது, வைரஸ் தொற்றால் இதுவரை இறந்தோர் எண்ணிக்கையை, 26 ஆயிரத்து, 816 ஆக உயர்த்தியுள்ளது.பலியானோர் எண்ணிக்கையிலும், 11 ஆயிரத்து, 596 பேருடன், மஹாராஷ்டிரா முதலிடத்தில் நீடிக்கிறது. டில்லி, 3,597 பேருடன், இரண்டாம் இடத்திலும், தமிழகம், 2,403 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.குஜராத்தில், 2,122; கர்நாடகாவில், 1,240; உ.பி.,யில், 1,108; மே.,வங்கத்தில், 1,076; ம.பி.,யில், 706; ஆந்திராவில், 586; ராஜஸ்தானில், 553 பேரும் இறந்து உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பாதிப்பு, இறப்புபல மடங்கு குறைவுநாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினந்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், உலக அளவில் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பெரு, சிலி, மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஈரான், பாக்., ஸ்பெயின் ஆகிய, 11 நாடுகளின் ஒட்டுமொத்த பாதிப்புடன் ஒப்பிடும் நிலையில், நம் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, எட்டு மடங்கு குறைவாகவே உள்ளது. அத்துடன், இந்நாடுகளின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை, நம்மை விட, 14 மடங்கு அதிகமாக உள்ளது என, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X