சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அல்வா கொடுத்து போராட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கடலுார்; பிளஸ் 2 தேர்ச்சியில் கடலுார் மாவட்டம், கடைசி இடம் வந்ததை கண்டித்து, பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சி.இ.ஓ., அலுவலகத்தில் அல்வா கொடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. தமிழக அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் கடலுார் மாவட்டம் கடைசி இடத்தில் வந்தது.இதனை கண்டித்து, கடலுார் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சி.இ.ஓ., அலுவலகத்தில் அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் ஆசிரியர்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்.,க்கு சமமான சிறப்பு அதிகாரியை நியமிக்க வலியுறுத்தி, சி.இ.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தனர்.நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் வெண் புறா குமார், தமிழ்நாடு மீனவர் பேரவை சுப்புராயன், அப்துல் கலாம் பொது நல பேரவை ரவி, வெண் புறா பொது நல பேரவை சண்முகம், வி.சி., மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X