சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல்: நால்வர் கைது

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் பெரிய காலனியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து, இளவரசன். இளவரசன் நேற்று முன்தினம் தனது குழந்தையின் பிறந்த நாள் கொண்டாடினார். விழா முடிந்ததும் நண்பர்களுக்கு உணவு பரிமாறினார். அப்போது சாப்பிட இலை இல்லாததால், அருகில் மாரிமுத்துவின் தோட்டத்தில் இருந்த வாழை இலையை இளவரசன் பறித்துள்ளார்.இதனை மாரிமுத்து தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இளவரசன் ஆதரவாளர்கள் மற்றும் மாரிமுத்து ஆதரவாளர்கள் தாக்கி கொண்டனர். இதில் மாரிமுத்து, அவரது தாய் அரசாயி, கண்ணன் மனைவி விஜயலட்சுமி, சத்தியவாணி ஆகியோர் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்த புகார்களின் பேரில், இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து, இளவரசன்,37, கண்ணன்,35, மணியரசன்,40, மாரிமுத்து,31, ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X