சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய மரவாடிக்கு 'சீல்': கடலூர் கலெக்டர் அதிரடி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் ஊரடங்கை மீறி இயங்கிய மரவாடிக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முழு ஊடரங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், மாலையில் கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்தார். பாதிரிக்குப்பம் பெட்ரோல் பங்க் அருகில் ஊரடங்கை மீறி இயங்கிய மரவாடியை மூடி 'சீல்' வைக்க உத்தரவிட்டார். வருவாய்த்துறை ஊழியர்கள் மரவாடியை பூட்டி சீல் வைத்தனர்.தொடர்ந்து, திருவந்திபுரம், பில்லாலி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு வழியாக நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கொரோனா அச்சமின்றி வெளியே சுற்றி வருகின்றீர்கள். இனி ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.கார், ஆட்டோவில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்குப் பதிய போலீசாருக்கு உத்தரவிட்டார். தாசில்தார் செல்வகுமார் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X