தமிழ்நாடு

தேர்வு: சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம்...சடையம்பட்டியில் அரசு கலை, அறிவியல்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

கல்லுாரிகள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லுாரி இயங்கும் இடத்தில் மருத்துவக்கல்லுாரி அமைக்கப்பட உள்ளதால், சோமண்டார்குடி அருகே சடையம்பட்டில் கலைக் கல்லுாரிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லுாரி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், கணிப்பொறியியல் ஆகிய பாடப் பிரிவுகளுடன் துவங்கிய கல்லுாரி தற்காலிகமாக கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கியது. 2011--12ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், தொடர்ந்து 2012-13 கல்வியாண்டிற்கு பிறகு எதிரே உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியிலும் சேர்த்து வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து சிறுவங்கூர் சமத்துவபுரம் எதிரே 11 ஏக்கர் நிலப்பரப்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு கல்லுாரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, 8 கோடி ரூபாய் நிதியில் 2014-ல் பணிகள் துவக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் காலை, மாலை என இரு வேளைகளில் இளங்கலை, முதுகலை வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, பெரம்பலுார், கடலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இக்கல்லுாரிக்கான மாணவர்கள் விடுதியும் பெருவங்கூர் பகுதியில் கட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லுாரி அறிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுவங்கூரில் அரசு கலைக்கல்லுாரி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 20 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடம் முழுமையும் தேர்வு செய்யப்பட்டது.மருத்துவக்கல்லுாரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் சிறுவங்கூரில் இயங்கி வந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை வேறிடத்தில் மாற்றி அமைத்து கட்டடம் கட்டுவதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பிலான அரசுக்கு சொந்தமான இடத்தில் கல்லுாரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.விரைவில் அங்கு கட்டுமான பணிக்கான ஆயத்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X