பொது செய்தி

இந்தியா

சீனா நுழைவதை தடுக்க கண்காணிப்பில் கடற்படை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், கடல் பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைவதை தடுக்கும் வகையில், நம் கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.

எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை விலக்கி கொள்வது தொடர்பாக பேச்சு நடந்து வருகின்றது.எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், நம் ராணுவம் மற்றும் விமானப் படை தயார் நிலையில் உள்ளது. அதுபோல், கடல் பகுதியிலும், நம் கடற்படை உஷார் நிலையில் உள்ளது. தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில், கடற்படை ஈடுபட்டுள்ளது.விமானம் தாங்கிய போர்க் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள் ஆகியவை கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.தென் சீன கடலின் பெரும்பகுதியை, சீனா ஆக்கிரமித்துள்ளது.


இந்த நிலையில், மியான்மர், பாகிஸ்தான், இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்காவில் முக்கிய துறைமுகங்களில், சீனா, தன் கடற்படை தளத்தை அமைத்துள்ளது. திட்டங்களை செயல்படுத்துவதாக, மிகப்பெரும் தொகையை செலவிட்டு, இந்த துறைமுகங்களை, தன் கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துள்ளது.கடற் கொள்ளையர்களை கண்காணிப்பதாக கூறி, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில், சீனா ரோந்து மேற்கொள்ளும். லடாக் எல்லையில், கடந்த மாதம், 15ம் தேதி, இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, நம் கடற்படை உஷார்படுத்தப்பட்டது.நம் கடல் எல்லைக்குள், சீன கடற்படை நுழையாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X