பொது செய்தி

தமிழ்நாடு

ரிஷிவந்தியம் அரசு கலை கல்லுாரியில்மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; நடப்பு கல்வியாண்டில் துவங்கும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.ரிஷிவந்தியத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மாவட்ட துவக்க விழாவின் போது முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். இதையொட்டி தற்காலிகமாக கல்லுாரி செயல்பட அரியலுார் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, இதற்கென 10 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த கல்வியாண்டு முதல் கல்லுாரி செயல்படுகிறது.இது குறித்து கல்லுாரி முதல்வர் சண்முகம் கூறியதாவது: திருவள்ளுவர் பல்கலைகழக கட்டுப்பாட்டில் செயல்படும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பொருளாதாரம், பி.எஸ்சி., புள்ளியியல், கணினி அறிவியல், பி.காம்., ஆகிய 5 பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவிகள் நேரடியாக வராமல் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.இன்று முதல் வரும் 30ம் தேதி(வியாழன் கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் ஒரே விண்ணப்பத்தில் பல்வேறு கல்லுாரிகளுக்கும், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் 50 ரூபாயும், ஜாதிச்சான்று நகலுடன் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 2 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை வசதி மைய ஒருங்கிணைப்பாளரை 98431 75303 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X