பொது செய்தி

தமிழ்நாடு

குலதெய்வ கோவில்களில் வழிபாடு ஆடி மாதத்தில் பக்தர்கள் ஏமாற்றம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

தியாகதுருகம்; ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த முடியாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆடி மாதத்தில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அப்போது உயிர் பலியிடுதல், மொட்டை அடித்துக் கொள்ளுதல், காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்துவர்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இம்மாதத்தில் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று பூஜை செய்வது தொன்றுதொட்டு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.ஆடி மாதத்தில் குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வெளிமாநிலங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் சிலர் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.குறிப்பாக பிரசித்திபெற்ற கோவில்கள் அனைத்திலும் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. அன்றாட பூஜைகள் மட்டும் தவறாமல் நடந்து வருகிறது.இக்காரணங்களால் ஆடிமாதம் பிறந்தும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆண்டு தோறும் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு வரும் பக்தர்களிடையே ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X