முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஜூலை 19, 2020
Share

சங்கராபுரம்; சங்கராபுரத்தில் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.சங்கராபுரம் நகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. ஆனால், ஏராளமானோர் முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றுகின்றனர்.இந்நிலையில், சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.பிரசாரத்தில், முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியம், சமூக இடைவெளியைகடைபிடித்தால், அடிக்கடி கை கழுவுதல் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.வழக்குப்பதிவுசங்கராபுரம் நகரில் பைக்கில் ஒருவர் மட்டுமே வரவேண்டும். 2 பேர் வரக்கூடாது என போலீசார் மைக் முலம் எச்சரித்தனர். போலீசார்எச்சரித்தும் 2 பேருடன் பைக்கில் வந்தவர்கள், முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் என 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.அபராதம் விதிப்புதாசில்தார் நடராஜன் சங்கராபுரம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது ஊரடங்கை முன்னிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருந்த ஒரு மொபைல் போன் ஷாப் மற்றும் மூரார்பாளையத்தில் ஒரு மளிகைக்கடை உரிமையாளர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X