பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்புமா சேவூர் குளம்?; விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 நிரம்புமா சேவூர் குளம்?; விவசாயிகள் எதிர்பார்ப்பு

அவிநாசி:சேவூர் குளம், இந்தாண்டும் நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு, அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.ஆண்டு சராசரி மழைப்பொழிவு, 600 மி.மீ. என்ற மிகக் குறைந்த மழை அளவை கொண்ட பகுதியாக அவிநாசி விளங்கி வருகிறது.இதனால், பருவமழையை நம்பியே குளம், குட்டை உள் ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. இதில், அவிநாசி அருகேயுள்ள சேவூரில், 120 ஏக்கர் பரப்பில், குளம் உள்ளது.இக்குளத்தில் நிரம்பும் தண்ணீரால், சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள், பசுமைக்கு மாறும். இந்தாண்டு, சேவூர் சுற்றுப்புற பகுதிகளில், பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி வருகின்றன.ஆனால், சேவூர் குளத்தில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில், குளத்தில் தண்ணீர் நிரம்பியது. அருகே உள்ள கிளாகுளத்திலும், தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இருப்பினும், நடப்பாண்டு, சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக பெய்து வரும் நிலையில், சேவூர் குளம் நிரம்புமா என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X