அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு காணொளி பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு காணொளி பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்படுகிறது

Added : ஜூலை 19, 2020
Share

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசால் உருவாக்கப்பட்ட காணொளி பாடங்கள் டவுன்லோடு செய்து தரும் பணிகள் நடந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பிளஸ்-2 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி முன்னரே மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் கல்வி பாடங்களை பதிவேற்றும் பணிகள் தற்போது பள்ளி அளவில் நடந்து வருகிறது.தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களால் திறமையான ஆசிரியர்களை கொண்டு பிளஸ்-2 வகுப்பிற்கு காணொளி பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பாடங்கள் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.பள்ளிகள் திறக்கும் முன்னரே 10, பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று பதிவிறக்கம் செய்யப்பட்ட காணொளி பாடங்களையும் பள்ளி வாரியாக மாணவர்களுக்கு பதிவேற்றும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்களுடன் காணொளி பாடங்களும் பதிவேற்றம் செய்து கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X