பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 மறுத்தேர்வு: 38 பேர் எழுத ஆர்வம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மறுத்தேர்வு எழுத, 38 மாணவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.மார்ச் 2ல் துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 24ம் தேதி வேதியியல், கணக்குபதிவியல், புவியியல் தேர்வோடு நிறைவடைந்தது. திருப்பூரில் வேதியியல் தேர்வினை, 9 ஆயிரத்து, 301 பேரும், கணக்கு பதிவியல், 12 ஆயிரத்து, 958 பேரும், புவியியல் தேர்வை, 286 பேரும் எழுதினர்.
ஆயிரத்து, 267 பேர் பங்கேற்கவில்லை. தனித்தேர்வர்களில், 152 பேர் பங்கேற்றனர்; 57 பேர் ஆப்சென்ட்.கொரோனா அச்சம் காரணமாக, அன்று நடந்த தேர்வில் பலர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கான மறுதேர்வு ஜூலை 27ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து தரப்பட்டது.நேற்றுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டன. இதில், 38 பேர் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட் மட்டுமே பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X