பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பில்லை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் ஜாலியாக சுற்றி வந்ததால் முழு ஊரடங்கு கேள்விக்குறியானது.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய வர்கள் மீதி போலீசார் காலை 6:00 மணி முதல் வழக்கு பதிந்தும், சுற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.ஆனால் நேற்று உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், விருத்தாசலம் சாலை சந்திப்பு உள்ளிட்ட எந்த இடத்திலும் போலீசார் நேற்று காலை 6:00 மணி முதல் காலை 11:00 மணியை கடந்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால் வாலிபர்கள் எந்த தடையும் இன்றி வாகனத்தில் சுற்றி வருகின்றனர். உளுந்துார்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X