மத்திய அரசின் மாயை: ராகுல் ஆவேச பாய்ச்சல்

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
congress, Rahul, Rahul Gandhi, ராகுல், காங்கிரஸ்

புதுடில்லி : ''மத்திய அரசு, தொடர்ந்து பொய்யை கட்டவிழ்த்து விடுகிறது; இந்த மாயை விரைவில் உடையும். இதற்காக, மத்திய அரசு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ், பொருளாதார வளர்ச்சி, சீன ஆக்கிரமிப்பு போன்றவிஷயங்களில், மத்திய அரசு, தொடர்ந்து பொய்யை கட்டவிழ்த்து விடுகிறது. பரிசோதனை குறைப்பு, இறப்பு எண்ணிக்கையில் தவறான தகவல்களை தருவது ஆகியவற்றின் மூலம், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். புதிய கணக்கீட்டு முறையை அடிப்படையாகக் கூறி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக கூறுகின்றனர்.

ஊடகங்களை மிரட்டுவதன் வாயிலாக, சீன ஆக்கிர மிப்பு விஷயத்தில் பொய் தகவல்களை பரப்புகின்றனர். இதுபோன்ற மாயை விரைவில் உடையும். இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும். கடந்த, 2014ம் ஆண்டிலிருந்து, பிரதமர் மிகப் பெரிய தவறுகளை செய்து வருகிறார். இதனால், நாடு பலவீனமடைந்து விட்டது. மக்களை மிக மோசமான நிலைக்கு தள்ளி விட்டனர். புவிசார் அரசியல் உலகில், வெற்று வார்த்தைகள் தீர்வாகாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya,இந்தியா
20-ஜூலை-202023:21:07 IST Report Abuse
Rajan இவனும் சூசையும் என்று அரசியலில் துடைத்து எரிய படுவார்களோ அன்று தான் இந்திய தற்கால வரலாற்றின் பொன்னால்
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
20-ஜூலை-202022:12:07 IST Report Abuse
Ganesh Shetty அதெல்லாம் சரி அந்த ஒப்பந்தம்,ஒப்பந்தம் என்னவென்று இன்றுவரை கூறவில்லை இந்திய மக்கள் தலையை பீச் சிகிக்கிறாங்க என்ன ஒப்பந்தம் என்று?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:08:47 IST Report Abuse
தல புராணம் பிரதமர் மோடி வலிமையான மனிதர் எனும் தோற்றம்தான் இப்போது தேசத்துக்கு மிகப்பெரிய பலவீனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X