பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் 6 நாள் முழு ஊரடங்குஅனைத்து வியாபாரிகள் சங்கம் முடிவு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் நகரில் நாளை 21 ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு செய்ய அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க அவசர கூட்டம் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடந்தது.சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். தாசில்தார் நடராஜன், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன்,முன்னாள் செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். செயலாளர் தேவ தீனதயாளன் வரவேற்றார்.கூட்டத்தில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சீனுவாசன், ஓட்டல் பிரிவு சுதாகரன், நகை அடகு பிடிப்போர் சங்கம் ஆறுமுகம், முன்னாள் தலைவர் பிரகாஷ், சங்க பொருளாளர் ரவிச்சந்திரன் பேசினர்.கூட்டத்தில் கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.சங்கராபுரம் நகரில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடை தெருவில் வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நாளை 21 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை 6 நாட்கள் சங்கராபுரம் நகரில் ஓட்டல், டீகடை, பூகடை, தெருவோர கடைகள், ஜவுளி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் முழுமையாக முடி முழு பொது முடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.மருந்து கடைகள் காலை 8 மணிக்கு திறந்து மாலை 7 மணி வரை திறந்து வைப்பது என்றும், முதல் பால மேட்டில் உள்ள காய்கறிகடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும்,இதை மீறும் கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல் வைக்கும்போது சங்கம் தலையிடாது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X