ஊரடங்கில் செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் செயல்பட்ட 50 கடைகளுக்கு அபராதம்

Added : ஜூலை 19, 2020
Share

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 50 கடை உரிமையாளர்களிடம் தலா ரு.500 அபராதம் வசூலிக்கப்பட்டது.சங்கராபுரம் தாசில்தார் நடராஜன் நேற்று ரோந்து சென்றார். அப்போது விரியூர், பழையனுர், சித்தால், நுாரோலை, மேல பழங்கூர், ராமராஜபுரம், ரிசிவந்தியம் ஆகிய கிராமங்களில் முழு ஊரடங்கில் மளிகை, இறைச்சி கடைகள், பூ கடை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்தன.மேற்படி கடை உரிமையாளர்களிடம் தலா ரு.500 அபராதம் விதித்து கடைகள் முடப்பட்டது.சங்கராபுரம் அருகே ஊரடங்கை மீறி திறந்திருந்த 2 பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தார்.சங்கராபுரம் பகுதியில் நேற்று முழு ஊரடங்கில் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம், பாசார் கிராமத்தில் பெட்ரோல் பங்க் திறந்திருந்ததால் தாசில்தார் நடராஜன் உரிமையாளரிடம் தலா ரு.500 அபராதம் விதித்து பங்க் மூடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X