சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்கசிவால் தீ விபத்துகூரை வீடுகள் சேதம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே காட்டுசெல்லுாரில் மின்கசிவால் இரண்டு கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை,55; வடக்கு தெருவில் உள்ள இவரது கூரை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதனால் வீட்டில் இருந்த அனைவரும் பதறியடித்து வெளியே வந்தனர். உடன் அருகில் இருந்த இவரது சகோதரர் கோவிந்தராஜ்,52; என்பவரது கூரை வீட்டிற்கும் தீ பரவியது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த டி.வி., மிக்ஸி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், துணி உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X