பொது செய்தி

தமிழ்நாடு

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி தொடர்ந்து மூடல்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி பகுதியில் கொரோனா தொற்று அதிகமிருப்பதால் மறு தேதி அறிவிக்கும் வரை கமிட்டி தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்ததால், விவசாயிகள், விற்பனை கூட ஊழியர்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி திருக்கோவிலுார் மணிலா மற்றும் நெல் வியாபாரிகள் சங்கத்தினர் கடந்த 13ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ஏலத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்தனர்.இதன்படி கடந்த ஒரு வாரமாக மார்க்கெட் கமிட்டி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (20ம் தேதி) கமிட்டி திறக்கப்பட இருந்த நிலையில், கமிட்டியை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதுடன், அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளாததால் மறு அறிவிப்பு வரும் வரை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டாம் என கமிட்டி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.விரைவில் வியாபாரிகள், கமிட்டி நிர்வாகம் கலந்து பேசி நோய் தொற்று தன்மை குறித்து ஆராய்ந்த பிறகே கமிட்டி திறப்பதற்கான சூழல் ஏற்படும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X