ஒன்பது காண்டாமிருகங்கள் உள்ளிட்ட 108 விலங்குகள் வெள்ளத்தால் பலி

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

காசிரங்கா : அசாமில், பலத்த மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த, ஒன்பது காண்டாமிருகங்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள், தண்ணீரில் மூழ்கி பலியாயின.

அசாமில், முதல்வர், சர்பானந்த சோனோவால் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

நிவாரண முகாம்கள் : இது குறித்து, அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாவது: மாநிலத்தின் பல்வேறு இடங்களில், பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம், ஆபத்தை விளைவிக்கும் வகையில், வெகுவாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, 26 மாவட்டங்களில் உள்ள, 2,௭௦௦ கிராமங்கள், முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளன.இந்த கிராமங்களை சேர்ந்த, 2௮ லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன், ௧.௧௭ லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.மழை வெள்ளத்தால், இதுவரை, 79 பேர் இறந்துள்ளனர். வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை மீட்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில், 6௫௦ நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில், 4௮ ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகளின் சரணாலய பகுதியும், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.பிரதமர் உறுதிதேசிய பூங்காவின், 85 சதவீத பகுதி, முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கி ஒன்பது காண்டாமிருகங்கள், காட்டெருமைகள், மலைப்பாம்பு, காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள், சதுப்பு நில மான்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள் இறந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய, 134 விலங்குகள் மீட்கப்பட்ட நிலையில், 110 விலங்குகள் பாதுகாப்பான வனப் பகுதியில் விடப்பட்டன.தேசிய பூங்காவில் இருந்து வெளியேறியபோது, வாகனங்கள் மோதியதால் காயமடைந்த, ஒரு வயது பெண் காண்டாமிருகம் உள்ளிட்ட, எட்டு விலங்கு களுக்கு, வன விலங்கு பாதுகாப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அசாம் முதல்வர் சர்பானந்தாவை நேற்று தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக, அப்போது பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.டில்லியில் பலத்த மழைமத்திய டில்லியில், நேற்று காலை முதல், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில், மழை வெள்ளம் தேங்கியுள்ளதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.பல இடங்களில், மழை வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கின. மின்டோ பாலத்தின் அடிப்பகுதியில், வெள்ளத்தில் மூழ்கிய சரக்கு வாகனத்தின், 56 வயது டிரைவர், நீரில் மூழ்கி பலியானார். மின்சாரம் பாய்ந்ததில், இன்னொருவர் பலியானார். சில இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X