தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பார்லி., நிலைக்குழுக்கள் ஆலோசனை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

புதுடில்லி : நாட்டில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, பார்லி., நிலைக்குழுக்கள், ஆலோசனை நடத்தியுள்ளதாக, ராஜ்யசபா தலைவர், வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

நாட்டில், கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைய தொடங்கியதை அடுத்து, பார்லிமென்ட் கூட்டம் முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டது.மூன்று மாத இடைவெளிக்கு பின், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் எம்.பி.,க்களிடையே, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அவசியம் என்பதால், அதற்கான திட்டமிடல் மற்றும் ஆலோசனை அவசியம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு மற்றும் லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லா ஆகியோருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு, நேற்று வெளியிட்ட, 'டுவிட்டர்' சமூக வலைதள பதிவில், கூறியுள்ளதாவது:பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது மற்றும் நிலைக்குழு கூட்டங்கள் தொடர்பாக, லோக்சபா சபாநாயகர், ஓம் பிர்லாவுடன், தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் இருவரும், கூட்டத்தொடரை நடத்துவதில் உறுதியுடன் இருக்கிறோம்.உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கி யுள்ளதுடன், சில தடங்களில் ரயில்களும் இயக்கப்பட உள்ளன. பார்லி.,யின் நிலைக்குழு கூட்டங்களும், இம்மாதம் நடைபெற துவங்கியுள்ளன. இதன்படி, உள்நாட்டு விவகாரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான, நான்கு நிலைக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில், எம்.பி.,க்கள் நேரடியாக பங்கேற்று உள்ளனர்.

கொரோனா தொடர்பாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, அவர்கள் ஆய்வு செய்து உள்ளனர். அதேநேரம், வைரஸ் தொற்றினை கையாளும், நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வினை, பார்லி., மேற்கொள்ளும் நிலை உள்ளது.எனவே, கூட்டத்தொடர் நடத்துவதில், குறுகிய காலக்கெடு எதுவும் விதிக்க சாத்தியமில்லை.வைரஸ் பாதிப்பு நேரத்தில், எம்.பி.,க் கள் மக்களுடன் இருக்க விரும்புவதால், கூட்டத்தொடர் நாட்களை வேண்டுமானால், அட்டவணையில் இருப்பதை விட குறைத்துக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X