திருப்பூர்:கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், அரசு அறிவிப்புப்படி, நேற்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.முதல்வரின் அறிவிப்புபடி, நேற்று, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று, நகரப் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின்றி வெறிச்சோடி இருந்தது. கிராமப்புறங்களில் காலை நேரங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
கொங்கு மெயின்ரோடு ரங்காபுரம், எஸ்.வி., காலனி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று பரவல் இருந்த நிலையில், அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும், அங்குள்ள இறைச்சி வியாபாரிகள் பலர், தங்கள் வீடுகளிலேயே இறைச்சி விற்பனை செய்தனர்.தொற்று பாதிக்கப்பட்ட அண்ணா நகர், தனலட்சுமி தியேட்டர் பின், இந்திரா நகரிலும், இறைச்சி விற்பனை நடந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்காமல் துளியும் பயமின்றி, பலரும் இறைச்சி வாங்கி சென்றனர்; 'டோர் டெலிவரி'யும் நடந்தது.திருப்பூரில் ஆடு, மாடு, கோழி இறைச்சி கடை உரிமையாளர் சங்கம் உள்ளது. இச்சங்கத்தினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி, இத்தகைய செயலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்.
அவிநாசி, பல்லடம், வெள்ளகோவில், பொங்கலுார் உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில், நகர்புறங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி, ரோடு, வீதிகள் வெறிச்சோடி இருந்தன. கிராமப்புறங்களில், மக்கள் நடமாட்டம் இருந்தது. பொங்கலுார் உள்ளிட்ட சில இடங்களில், கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்தது.சரக்கு லாரிகள் நிசப்தம்
கொரோனா ஊரடங்கால், அடுத்த மாதம், 12ம் தேதி வரை, பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சரக்கு ரயில் போக்குவரத்து தொடர்கிறது. மகாராஷ்டிரா, உ.பி., ம.பி., மாநிலங்களில் இருந்து தானியங்கள், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து ரேஷன் பொருட்கள் வந்திறங்குகிறது.
தொடர்ச்சியாக, சுமை துாக்கும் வேலை இருந்ததால், கலாசு தொழிலாளர்களும் திருப்தியுடன் பணியாற்றினர்.நேற்று முழு ஊரடங்கால், கோதுமை, கோழித்தீவனம், மக்காச்சோளம் உள்ளிட்டவை சரக்கு ரயிலில் வந்த போதும், தொழிலாளர்கள், சுமை துாக்கும் பணிக்கும் வரவில்லை; ரயிலில் இருந்து பொருட்கள் இறக்கப்படவில்லை. அவற்றை எடுத்து செல்வதற்காக வந்த, 150 லாரிகள், கூட்ஸ்ெஷட்டில் நிறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE