மரக்காணம்; மரக்காணம் பேரூராட்சி பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரைகளை டி.எஸ்.பி., வழங்கினார்.கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் படித்த, கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதாகிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30சி மாத்திரைகளை குறைந்த விலையில் வாங்கி கோட்டக்குப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டி.எஸ்.பி., அஜய்தங்கம் வழங்கி வருகின்றார். மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30சி மாத்திரைகளை டி.எஸ்.பி., அஜய்தங்கம் தலைமையில் வழங்கினர். தாசில்தார் ஞானம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகானன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று மாத்திரைகளை வழங்க களப்பணியாளர்களிடம் ஒப்படைத்து, மாத்திரைகளை எத்தனை நாட்களுக்கு, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்துக்கூறினார்.இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம், சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.