விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கொரோனா நோய் தொற்று பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் தடைகளை அமைத்து சத்து மாத்திரைகளை வழங்கினர்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இதுவரை 150 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டும், இரண்டு பேர் பலியாகியும், தற்பொழுது 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒன்றியத்தில் நோய் தொற்று பாதிப்பு பகுதியான வாக்கூர், தும்பூர், எண்ணாயிரம், ராதாபுரம் ,பனையபுரம் ஆகிய பகுதிகளில்16 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த பி.டி.ஓ., க்கள் எழிலரசு, நந்த கோபால கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர்கள் ராமகிருஷ்ணன், அர்ச்சனா, பிரேமா,போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சத்யா, ரமணி, பாபு, லேப் டெக்னீசியன் சங்கீதா மற்றும் குழுவினர்கள் கிராமங்களுக்குச் சென்று வெளியாட்கள் யாரும் வராத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தினர்.கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுபடி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சுவாச பரிசோதனையும், தெர்மோ ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்தும் சத்து மாத்திரைகளையும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கினர்.மேலும் தூய்மை பணியாளர்களுக்கு நோய்தொற்று பாதுகாப்பு கவச உடைகளை வழங்கி, அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.விக்கிரவாண்டி தாசில்தார் பார்த்திபன் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE