சந்திப்பு சாலையில் மழைநீர் சங்கமம்: விரைவில் கால்வாய் கட்டும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்திப்பு சாலையில் மழைநீர் சங்கமம்: விரைவில் கால்வாய் கட்டும் பணி

Added : ஜூலை 19, 2020
Share
 சந்திப்பு சாலையில் மழைநீர் சங்கமம்: விரைவில் கால்வாய் கட்டும் பணி

திருப்பூர்;திருப்பூர் புஷ்பா சந்திப்பு ரோட்டில், போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பாக, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.திருப்பூர்- அவிநாசி ரோடு மற்றும் பி.என்., ரோடு சந்திப்பு பகுதியான, புஷ்பா சந்திப்பு ரோடு, நகரின் மையப்பகுதியாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கோவில் உட்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், இப்பகுதி எந்நேரமும் நெரிசல் நிறைந்தே காணப்படும்.குறிப்பாக, மழையின் போது, இங்குள்ள ரவுண்டானா பகுதியில், குளம் போல் தேங்கும் மழைநீரால், பெரும் சிரமம் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, புஷ்பா சந்திப்பில், அவிநாசி ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இருந்து, பி.என்., ரோட்டில் உள்ள 'அம்மா' மெடிக்கல் வரை, 39 மீ., துாரத்துக்கு சாக்கடை கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையில், பணியின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், நேற்று ஆய்வு செய்தார்.துணை கமிஷனர் சுரேஷ்குமார் உட்பட போலீசார் உடனிருந்தனர். 'மூன்று கட்டமாக பணி நடக்க உள்ளது; பொதுமக்கள் ரோட்டை கடக்க, நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது' எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X