ஊரடங்கை மீறியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை

Added : ஜூலை 19, 2020
Share
திண்டிவனம்; திண்டிவனத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வலம் வந்த வாகன ஓட்டிகளை இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை செய்து, அனுப்பி வைத்தார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனத்திலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.ஊரடங்கின் போது, அத்தியாவசிய

திண்டிவனம்; திண்டிவனத்தில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வலம் வந்த வாகன ஓட்டிகளை இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை செய்து, அனுப்பி வைத்தார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக திண்டிவனத்திலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.ஊரடங்கின் போது, அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே வாகன ஓட்டிகள் வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.திண்டிவனம் நகரத்தில் ஊரடங்கை கடைபிடிக்காமல் பலர் வீணாக இரு சக்கர வாகனங்களில் நகர் வலம் வந்தனர். இவர்களை எம்.ஆர்.எஸ்.ரயில்வே கேட் அருகே டவுன் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, தடுத்து நிறுத்தி, எச்சரித்து, அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, காரணம் இல்லாமல் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X