பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில்3வது வாரமாக முழு ஊரடங்கு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாவது வாரமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஜூலை மாதம் முழுதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.இந்நிலையில், ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டம் முழுவதும் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், முழு ஊரடங்கு தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்தும், வழக்கு பதிந்து அபராதம் வசூலித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X