பொது செய்தி

தமிழ்நாடு

சமூக விலகல் இல்லாததால் அபராதம் விதிப்பு: விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 சமூக விலகல் இல்லாததால் அபராதம் விதிப்பு: விதிமுறைகளை பின்பற்ற அறிவுரை

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் உள்ள கடைகளில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அரசு அறிவுரையின் படி தளர்வுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கடைகளில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்; பணியாளர்கள், கடைக்கு வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், கடைகளில் சானிடைசர் வைக்க வேண்டும் என்ற அரசு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்.இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.பறக்கும் படை அதிகாரிகள், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சசிரேகா, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேஷ், துணை தாசில்தார் ஜோதிபாசு, போலீஸ் ஏட்டு அகமது ெஷரிப் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொள்ளாச்சி தாலுகா அலுவலக ரோட்டில், சிக்னல் அருகே மருந்து கடையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைக்குள் சமூக இடைவெளி பின்பற்றாமல் அதிகளவு கூட்டம் இருந்ததால், கடைக்காரருக்கு எச்சரிக்கை விடுத்தனர். கூட்டமாக நிற்பவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தினர்.கடைக்காரருக்கு அபராதம் விதித்ததுடன், சமூக இடைவெளி பின்பற்றி மக்கள் நிற்பதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என அறிவுறுத்தினர்.அதிகாரிகள் கூறியதாவது:வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகளில், சமூக இடைவெளி முறையாக பின்பற்றுவதில்லை; அரசு நிர்ணயித்த நேரத்துக்கும் கூடுதலாக கடைகள் செயல்படுகிறதா என்றும்; அரசின் விதிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.மேலும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து, இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது.அபராதம் விதிப்பது நோக்கமல்ல; அரசின் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த, 20ம் தேதி முதல், பறக்கும்படை - 1 குழுவினர், 70,600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.எனவே, பொதுமக்கள், கடைக்காரர்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X