பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்போர் நலசங்க கூட்டம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் காமதேனு நகர் மற்றும் குழந்தைவேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினாார். செயலாளர் திருப்பதி பாலாஜி, பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.இதில், விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனம் மூலம் தினமும் ஒரு லட்சம் அளவிற்கு தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்கின்றனர்.இதனால், காமதேனு நகர், குழந்தைவேல் நகர், அக்பர் நகர், கமலா கண்ணப்பன் நகர், மாம்பழப்பட்டு பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும்மேற்பட்ட குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இது தொடர்பான புகாரில், சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே இருந்த ஆர்.டி.ஓ., இந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்தார்.ஆனால், அதிகாரிகள் மாற்றத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிறுவனம் திறக்கப்பட்டு, தண்ணீரை உறிஞ்சுகின்றனர். எனவே, விதிமுறை மீறி செயல்படும் இந்நிறுவனத்தை மூடுவதற்கு, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட அமைச்சர் மற்றும் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்போது, துணை செயலாளர்கள் ரகுபதி, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X