ஆடுதுறையும், அம்பையும் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகங்கள்
ஆடுதுறையும், அம்பையும் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகங்கள்

ஆடுதுறையும், அம்பையும் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகங்கள்

Added : ஜூன் 15, 2011 | |
Advertisement
மதுரை : குறுவை சாகுபடிக்கு ஆடுதுறை 36, அம்பை 16 ரக நெல்லை பயன்படுத்தலாம் என விவசாய அதிகாரி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல்போக சாகுபடிக்கு போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் தாராளமாக சாகுபடி பணிகளை துவக்கலாம். மதுரை கிழக்கு யூனியன் விவசாய உதவி இயக்குனர் எஸ்.கனகராஜ் கூறியிருப்பதாவது:

மதுரை : குறுவை சாகுபடிக்கு ஆடுதுறை 36, அம்பை 16 ரக நெல்லை பயன்படுத்தலாம் என விவசாய அதிகாரி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக வைகை அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முதல்போக சாகுபடிக்கு போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் தாராளமாக சாகுபடி பணிகளை துவக்கலாம். மதுரை கிழக்கு யூனியன் விவசாய உதவி இயக்குனர் எஸ்.கனகராஜ் கூறியிருப்பதாவது: குறுவை சாகுபடிக்கு ஆடுதுறை -36, அம்பை 16 ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம். இதை திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். இம்முறையில் நாற்றங்காலை டிரே நாற்றங்கால் அல்லது பாய் நாற்றங்காலாக செயல்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 80 டிரே அல்லது பாய் நாற்றுக்கு 40 சதுர மீட்டர் இடம் தேவை. இதில் 14 நாளில் நாற்றுக்களை பிடுங்கி நடலாம். இம்முறையில் விதைநெல்லும் ஒரு ஏக்கருக்கு 3 முதல் 8 கிலோ வரை போதும். குறைந்த தண்ணீர், இடுபொருள் போதும். பூச்சி, நோய் தாக்குதல் வராது. சிம்பு அதிகரித்து நெல் மகசூலும் ஏக்கருக்கு 8 மூடைகள் கூடுதலாக கிடைக்கும். விதைப்புக்கான நெல்விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணாட்டச்சத்துக்கள் கிழக்கு விரிவாக்க அலுவலகம், ஒத்தக்கடை, கருப்பாயூரணி துணை அலுவலகங்களில் போதுமான அளவு இருப்பு உள்ளது. விதை நெல் கிலோ ரூ. 5 மானியத்தில் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X