பொது செய்தி

தமிழ்நாடு

மரக்காணம் போலீசாருக்கு கொரோனா இல்லை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

மரக்காணம்; மரக்காணம் காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொரோனா தொற்று நோய் இல்லையென பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.மரக்காணம் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சாராயம் விற்பனை செய்த நபரை கைது செய்தனர். பின் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரை கைது செய்த போலீசாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார், காவலர்கள் ஏழுமலை, நாகமுத்து ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். நேற்று மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X