மும்பை: 'கோவில் கட்டினால் கொரோனாவை ஒழித்துவிட முடியும் என சிலர் நம்புகின்றனர்' என ராமர் கோவில் கட்டுமானம் குறித்து தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 3 அல்லது, 5ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர், மோடிக்கு, ராம ஜன்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கூறுகையில், 'கொரோனா வைரசுக்கு எதிரான போரை எவ்வாறு நடத்துவது என நாங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறோம். அதே நேரம், கோவிலை கட்டுவதால் கொரோனாவை ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். அதன் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்' எனக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE