மயிலம் பகுதிகளில் முழு கடையடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் பகுதிகளில் முழு கடையடைப்பு

Added : ஜூலை 19, 2020
Share

மயிலம்; மயிலம் ஒன்றியப் பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்ட தமிழகரசு பிரதி ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை கடைபிடிக்க அறிவுறுத்தியது. இதை முன்னிட்டு மயிலம் ஒன்றியத்திலுள்ள கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரியதச்சூர் உள்ளிட்ட பல கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X