சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இ-பாஸ்' பெற போலிச்சான்று: விசாரணை தீவிரம்

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், 'இ-பாஸ்' விண்ணப்பிக்க பயன்படுத்தப்பட்ட, போலி சான்றிதழை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால், பிற மாவட்டங்களில் திருப்பூர் வர, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இ-பாஸ் வழங்குகிறது. திருமணம், இறப்பு, மருத்துவம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், 'இ-பாஸ்' வழங்கப்படுகிறது.நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, 'இ-சேவை' மையத்திற்கு, 'இ-பாஸ்' விண்ணப்பிக்க, ஒருவர் சென்றார். இறப்பு காரியத்துக்காக, வெளியூர் செல்ல உள்ளதாக கூறி, விண்ணப்பத்துடன், கருவம்பாளையம் வி.ஏ.ஓ., கையொப்பமிட்ட சான்றிதழை வழங்கியுள்ளார்.ஆனால், கருவம்பாளையம் கிராமத்துக்கென, தனியாக, வி.ஏ.ஓ., இல்லை; மாறாக, திருப்பூர் நகருக்கு மட்டுமே, வி.ஏ.ஓ., உள்ளார் என்பது, தெரியவந்தது. சந்தேகமடைந்த இ-சேவை மைய அலுவலர்கள், அந்த சான்றிதழை, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் வசம் ஒப்படைத்தனர்.விசாரணையில், விண்ணப்பித்த நபர், பெரியாண்டிபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பதும், போலி சான்றிதழ் தயாரித்திருப்பதும் தெரியவந்தது.திருப்பூர் நகர வி.ஏ.ஓ., குமார் கொடுத்த புகாரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X