தமிழ்நாடு

அறிவுரை: மாவட்ட பொதுமக்களுக்கு மின் வாரியம்...பருவமழை விபத்துக்களை தடுக்க வழிமுறை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, மின் விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு பொதுமக்கள்முன்னெச்சரிக்கையுடன் செயல்பட மின்வாரிய அதிகாரிகள் அறிவுத்தியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட மின்வாரிய அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது, மின் விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வழிமுறைகள் கூறியுள்ளனர். அதன்படி, விழுப்புரம் மாவட்டதில் காற்று, மழை, மரக்கிளைகள் விழுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மின் கம்பிகள் ஏதேனும் தரையில் அறுந்து விழுந்து கிடந்தால் அதனை பொதுமக்கள் கைகளால் தொடாமலும், மிதிக்காமலும் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

மின்சார கம்பத்திலோ, ஸ்டே கம்பியிலோ கயிறு கட்டி துணிகள் உலரவைப்பது மற்றும் ஆடு, மாடுகள் கட்டுவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம் போன்றவற்றை ஆழப்படுத்தும்போது அதன் கரைப்பகுதி உயரப்படுத்தப்படும்.அப்போது அதன் குறுக்கே செல்லும் மின் பாதைக்கும், கரைக்கும் உள்ள இடைப்பட்ட துாரம் குறைந்துவிடும். ஆகவே, அதேபோல் இடைவெளி குறைவாக உள்ள இடத்தினை சுட்டிகாட்டி தங்கள் பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மின் பாதையின் அருகில் வளர்ந்து இருக்கும் தென்னை மரங்களின் மட்டைகளையோ அல்லது வேறு மரங்களின் கிளைகளையோ தன்னிச்சையாக வெட்டுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக, மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீட்டு உபயோக பொருள்களை கையாளும்போது ஸ்விட்ச் மற்றும் பிளக் பயன்படுத்தும்போது ஈர கையுடன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும், மின் துறை தொடர்பான தகவல்களை மின்தடை நிவர்த்தி மையத்திற்கு 1912, 18004255419, 9445855768, விழுப்புரம் நகர உதவி செயற்பொறி யாளர் 9445855750, விழுப்புரம் கிராம செயற்பொறி யாளர் 9445855756, கஞ்சனுார் உதவி செயற்பொறியாளர் 9445855762, விக்கிரவாண்டி உதவி செயற்பொறியாளர் 9445855739, மதுரப்பாக்கம் உதவி செய்பொறியாளர் 9445855745 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.மின்வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X