சிறுத்தை நடமாட்டம் கண்டறிய வனத்துறை கண்காணிப்பு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டம் கண்டறிய வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

Added : ஜூலை 19, 2020
Share
ஆனைமலை:ஆனைமலையில், சேனைக்கல்ராய பெருமாள் கோவில் பகுதியில், பத்து நாட்களுக்கு முன், ஆட்டுக்குட்டியை சிறுத்தை கொன்று, வனத்தினுள் இழுத்துச் சென்றது.இது குறித்து விவசாயிகள் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை:ஆனைமலையில், சேனைக்கல்ராய பெருமாள் கோவில் பகுதியில், பத்து நாட்களுக்கு முன், ஆட்டுக்குட்டியை சிறுத்தை கொன்று, வனத்தினுள் இழுத்துச் சென்றது.இது குறித்து விவசாயிகள் புகார் கொடுத்ததை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.கடந்த பத்து நாட்களாக கண்காணிப்பு மேற்கொண்டும், சிறுத்தை அப்பகுதிக்கு வராமல் போக்கு காட்டுவதால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்து உள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது:இரண்டு குழுக்கள் அமைத்து, கடந்த, பத்து நாட்களாக, சிறுத்தை வந்து சென்ற பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறோம்.பெரியபோது பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை, அப்பகுதியில் சிறுத்தை வந்ததாக விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில், அது நாயின் கால்தடம் எனத்தெரியவந்துள்ளது. கால்நடைகளை பாதுகாப்பான பகுதியில் கட்டுமாறு அறிவுறுத்தியுள்ளோம். சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டால், விரைவில் கூண்டு வைத்து பிடிக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X