பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் முழு ஊரடங்கால் ஆடி அமாவாசை பூ விற்பனை பாதிப்பு

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பூ வியாபாரம் பாதிக்கப்பட்டனர்.விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, திண்டிவனம் பூ மார்க்கெட்டில் இருந்து அதிகளவில் பூக்கள் அனுப்பி வைக்கப்படு கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திண்டிவனம் பூ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பூ மார்க்கெட், நோய் தொற்று காரணமாக, திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு, பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முழு ஊரடங்கு காரணமாக தற்காலிக பூ மார்க்கெட்டும் மூடப்பட்டது.விசேஷ காலங்களில் பூக்களில் விலை கூடுதலாக இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, முந்தைய நாள் பூக்களின் விலை மூன்று மடங்கு கூடுதலாக விற்கப்படும். ஊரடங்கு காரணமாக, ஆடி அமாவாசைக்கு முந்தைய நாளான நேற்று, விற்பனை குறைவாக இருந்தது. மார்க்கெட்டிற்கு எதிரில் ஒரு சில வியாபாரிகள், மல்லி மட்டும் கிலோ நூறு ரூபாய்க்கு என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை என்றாலே, முதல் நாள் பூக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், நேற்று பூக்களை விற்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில வியாபாரிகள், புதுச்சேரியில் இருந்து வந்த வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கே பூக்களை விற்பனை செய்தனர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X