பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையை காக்கும் பஞ்சகவ்யம்: கள ஆய்வில் அதிகாரி நம்பிக்கை

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement
 தென்னையை காக்கும் பஞ்சகவ்யம்: கள ஆய்வில் அதிகாரி நம்பிக்கை

திருப்பூர்:''தென்னைக்கு, பஞ்ச கவ்யம் தெளிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மகசூல் பெருகும்'' என, விதைச்சான்று துறை இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.தாராபுரம் தாலுகா, அலங்கியம் பகுதி விவசாயிகள், 'ஆர்கானிக்' பண்ணை அமைத்துள்ளனர். பஞ்சகவ்ய உரம் தயாரித்து, பாசன நீருடன் கலந்து, தென்னை மரத்துக்கு ஊட்டமளித்து வருகின்றனர். இயற்கை வழியில், ஜாதிக்காய், மிளகு ஆகியவற்றை, ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளனர்.இப்பண்ணையை, அரசின் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை இயக்குனர் சுப்பையா பார்வையிட்டார். அங்கு விளைவிக்கப்பட்டுள்ள தென்னை மரங்கள், 'கோ-30' ரக சோளம், 'கோ-8' ரக பாசிப்பயறு விதைப்பண்ணையை பார்வையிட்டார்.பின், அவர் கூறியதாவது:விதைப்பண்ணையை கண்ணும், கருத்துமாக பராமரிக்க வேண்டும். விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள், எதிர்காலத்தில், தரமான விதை தேவைக்கு, முக்கிய காரணமாக உள்ளனர். டி.ஏ.பி., கரைசல், 2 சதவீதம், இலை தெளிப்பு மூலமாக, கூடுதல் மகசூல் பெறலாம்; தகுந்த ஊடுபயிர் மூலம், உபரி வருவாய் பெறலாம்.நாட்டு மாடுகளின் கோமியம், சாணம் மூலம், பஞ்சகவ்யம் தயாரித்து, தென்னை மரத்துக்கு பயன்படுத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், கூடுதல் மகசூல் கிடைக்கும்.இயற்கை வழி விவசாய விளைப்பொருட்களுக்கு, மூன்று மடங்கு அதிக விலை கிடைப்பதால், 'ஆர்கானிக்' சான்று பெற்று, கூடுதல் லாபம் பெற, விவசாயிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின்போது, துணை இயக்குனர் வெங்கடாசலம், உதவி இயக்குனர் மாரிமுத்து, விதைச்சான்று அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X