சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூலை 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: தமிழர்களின் கடவுளான முருகரை இழிவுப்படுத்தும் வகையில், கந்த சஷ்டி கவச பாடலின் பொருளை, பெருமையை, தவறான பொருள்பட திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்செயல், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது; வேதனைக்குரியது.

'டவுட்' தனபாலு: எல்லா பிரச்னைகளுக்கும், பிற தலைவர்களை முந்திக் கொண்டு, அறிக்கை விடும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், காங்., தலைவர் அழகிரி போன்றோர், இந்த விவகாரம் குறித்து, வாய் திறக்காமல் இருப்பது, பல, 'டவுட்'டுகளை கிளப்புகிறது. அவர்கள் யாருக்கோ அஞ்சுவது நன்கு தெரிகிறது!

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், வைகைச் செல்வன்: நாட்டுக்காக, தியாகம் செய்து, சிறைக்கு சென்ற அந்த கால காங்கிரசார் சொன்னதை, நாட்டு மக்கள் கேட்டு, அதன்படி நடந்தனர். ஆனால், இந்த கால காங்கிரசார், ஊழலுக்காக சிறை சென்ற சிதம்பரம் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைத்தால், ஜாமினில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் தான் அதை கேட்பார்; நாடு கேட்காது.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது படி, இந்த கால காங்கிரசாருக்கு, மக்கள் மத்தியில் நல்ல எண்ணம், மதிப்பு இல்லை என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதற்கு காரணம், சிதம்பரம் போன்றவர்கள் தான் என்றும் நீங்கள் சொல்கிறீர்கள். இதை எப்போது அக்கட்சி மேலிடம் அறிந்து, தவறை சரி செய்யப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி: கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்த காலத்தில், கோவில்கள் பாதுகாக்கப்பட்டன; பல கோவில்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன. ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி. தானே களமிறங்கி, மயிலாப்பூர் குளத்தை சீரமைத்தவர் கருணாநிதி.

'டவுட்' தனபாலு: ஹிந்துக்கள் ஒற்றுமை அடைந்து வருகின்றனர்; அவர்கள் ஓட்டு, தி.மு.க.,வுக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில், இப்போது நீங்கள் அவரை, நல்லவர், வல்லவர் எனலாம். ஆனால், அவர் தான், 'ஹிந்துக்கள் என்றால் திருடர்கள்' என்றார். நெற்றியில் குங்குமம் வைத்த கட்சியினரை அவதுாறு செய்தார். ஹிந்து மதத்திற்கு எதிராக கருத்துகளை கூறியதில் அவர் தான் முன்னணியில் இருந்தார் என்பதில், தமிழக மக்களுக்கு, 'டவுட்' எப்போதும் இருக்கவே முடியாது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-ஜூலை-202018:53:18 IST Report Abuse
Anantharaman Srinivasan கிருபாநந்தவாரியாரை மேடையில் தாக்கியபோது கருணாநிதி முடங்கி போனதேன்..
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20-ஜூலை-202018:48:15 IST Report Abuse
Anantharaman Srinivasan கருணாநிதி குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதில் கில்லாடி.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
20-ஜூலை-202006:05:17 IST Report Abuse
D.Ambujavalli அந்நாளில் திருப்பதி சென்று வந்தார் என்பதற்காக சிவாஜியை எப்படி நடத்தினார்கள், கண்ணதாசன் வெறுப்புற்று வெளியேறி முழு ஆஸ்திகரான வரலாறுகளெல்லாம் யார் காலத்தில் நடந்தன ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X