பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்பனை குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் : எஸ்.பி.,

Added : ஜூலை 19, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது;விழுப்புரம் மாவட்டத்தில் மறைமுகமாக மூன்று நம்பர் லாட்டரி விற்பனை ஆன்லைன் மூலமாக பல்வேறு இடங்களில் நடைபெறுவதாக புகார்கள் வந்தன.இதனையடுத்து, லாட்டரி விற்பனையை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த தனிப்படை போலீசார், விழுப்புரத்தில் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், அவர்களுடன் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது குறித்து விசாரனை செய்யப்பட்டு வருகிறது.மேலும், லாட்டரி விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் போலீசாரை அணுக வேண்டும். தகவல் கொடுப்பவரின் முழு விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு தக்க சன்மானமும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X